’பெஸ்ட் கம்பெனி’: கொட்டும் மழையில் நண்பர்களுடன் சைக்ளிங் செல்லும் சமந்தா

’பெஸ்ட் கம்பெனி’: கொட்டும் மழையில் நண்பர்களுடன் சைக்ளிங் செல்லும் சமந்தா
’பெஸ்ட் கம்பெனி’: கொட்டும் மழையில் நண்பர்களுடன் சைக்ளிங் செல்லும் சமந்தா

கொட்டும் மழையில் சைக்ளிங் செல்லும் வீடியோவை நடிகை சமந்தா வெளியிட்டிருக்கிறார்.

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடந்த இவர்களின் திருமணத்திற்குப் பிறகு சமந்தா ஹைதராபாதில் வசித்து வருகிறார். சமந்தா ரூத் பிரபு என்று இருந்த தனது சமூக வலைதள பக்கங்களின் பெயரை நாக சைதன்யாவின் குடும்பப் பெயரான அக்கினேனியை சேர்த்து ‘சமந்தா அக்கினேனி’என்று மாற்றினார். இந்த நிலையில், சமந்தா அக்கினேனி என்ற பெயரை நீக்கிவிட்டு வெறும் ‘S' என்று தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் சமீபத்தில் மாற்றியது நாக சைதன்யா - சமந்தா ஜோடி விவாகரத்து செய்யவிருக்கிறார்கள் என்ற வதந்தியை பரப்பியது. அதேசமயம், தற்போது ‘சகுந்தலம்’ படத்தில் நடித்து வருவதால் ‘s’என மாற்றினார் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், அந்த வதந்திகள் உண்மையாகத்தான் இருக்குமோ என்று சமந்தாவின் சமீபத்திய சமூக வலைதளப் பதிவுகள் உணர்த்துகின்றன.

சமந்தா சைக்ளிங் செல்லும் வீடியோ:

View this post on Instagram

A post shared by S (@samantharuthprabhuoffl)

சமீபத்தில், அமீர்கானுக்கு நாக சைதன்யா குடும்பம் ஹைதராபாத்தில் விருந்து அளித்தனர். அதில், சமந்தா மிஸ்ஸிங். அதேபோல, நாக சைதன்யாவின் ‘லவ் ஸ்டோரி’ கடந்தவாரம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து பாராட்டுக்களைக் குவித்துக்கொண்டிருக்கிறது. அதுகுறித்த, பட போஸ்டர் எதுவுமே சமந்தா தனது சமூக வலைதளங்களின் பக்கங்களில் வெளியிடவில்லை. ஆனால், இதற்குமுன் சமந்தா எப்போதும் நாக சைதன்யாவின் படங்களை புரமோட் செய்துகொண்டே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், விவாகரத்து சர்ச்சைகளுக்கு மத்தியில் சமந்தா தனது தோழிகளுடன் படகு ஓட்டுவது, சைக்ளிங் செல்வது என்று இன்ஸ்டாகிராமில் செம்ம ஆக்டிவாக இருக்கிறார். இன்றும் கொட்டும் மழையில் நண்பர்களுடன் 21 கிலோ மீட்டர் சைக்ளிங் சென்றிருக்கிறார். அந்த வீடியோவை பகிர்ந்து “மழையில் சைக்ளிங் ரைடிங். நல்ல கம்பெனி கொடுக்கும் நண்பர்கள்" என்று உற்சாகமுடன் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com