விளைச்சல் இருந்தும் விலையில்லை: தக்காளியை சாலையோரம் கொட்டும் தருமபுரி விவசாயிகள்

விளைச்சல் இருந்தும் விலையில்லை: தக்காளியை சாலையோரம் கொட்டும் தருமபுரி விவசாயிகள்
விளைச்சல் இருந்தும் விலையில்லை: தக்காளியை சாலையோரம் கொட்டும் தருமபுரி விவசாயிகள்

தருமபுரி மாவட்டத்தில் தொடர் மழையால் தக்காளி விளைச்சல் அதிகரித்தும் போதிய விலை கிடைக்காததால் சாலையோரம் கொட்டும் அவலம் ஏற்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். இங்கு விளைவிக்கப்படும் தக்காளியை விவசாயிகள், பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டில் இருந்து சென்னை, பெங்களூர், ஓசூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தக்காளி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், மார்கெட்டில் விற்பனைக்கு வரும் தக்காளியின் அளவு அதிகரித்துள்ளதால், விலை சரிந்து கிலோ ரூ.4-க்கு விற்பனையாகிறது. இதனால் போதிய வருவாய் கிடைக்காமல் விவசாயிகள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர். மேலும் விலை குறைவாக இருப்பதால், அறுவடை செய்யும் கூலி கூட கிடைக்கவில்லை. இதனால் தக்காளியை விற்பனை செய்யாமல் விவசாயிகள் தக்காளியை சாலையோரம் கொட்டிவிட்டுச் செல்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com