ரியல்மி GT நியோ 2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் வெளியாக வாய்ப்பு

ரியல்மி GT நியோ 2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் வெளியாக வாய்ப்பு
ரியல்மி GT நியோ 2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் வெளியாக வாய்ப்பு

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சீனாவின் ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாகி இருந்தது ரியல்மி நிறுவனத்தின் GT நியோ 2 ஸ்மார்ட்போன். இந்நிலையில் இந்த போன் வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த தகவலை ரியல்மி இந்திய தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத், ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். 

“உங்கள் குரலை நாங்கள் கேட்டோம். வரும் அக்டோபரில் GT நியோ 2 ஸ்மார்ட்போன் குறித்த அறிவிப்புகள் வெளிவரலாம். காத்திருங்கள். அதோடு இந்த போனில் நீங்கள் எதிர்பார்க்கிற சிறப்பம்சங்கள் என்ன? அதன் புராஸசரா, டிஸ்பிளேவா, ஃபாஸ்ட் சார்ஜிங்கா அல்லது மூன்றுமா” என தனது ட்வீட் மூலம் கேட்டுள்ளார் அவர். 

இந்த ஆண்டு அறிமுகமான GT நியோ ஸ்மார்ட்போனின் வெற்றியை தொடர்ந்து அதே சீரிஸில் அடுத்த வெர்ஷனாக இந்த போன் அறிமுகமாகிறது. 

6.62 இன்ச் AMOLED ஃபுள் HD டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 870, 12 ஜிபி ரேம், 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்ட் 11 OS, 5000mAh பேட்டரி, ரியர் சைடில் மூன்று கேமரா, அதில் 64 மெகா பிக்ஸல் கொண்ட பிரைமரி கேமரா, 16 மெகா பிக்ஸல் கொண்ட பிராண்ட் கேமரா கொண்டுள்ளது இந்த போன்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com