2020-21 குறுவை சாகுபடி காப்பீட்டுத்தொகை ரூ20.29 கோடி வழங்கப்பட்டது: டி.ஆர்.பி ராஜா எம்எல்ஏ

2020-21 குறுவை சாகுபடி காப்பீட்டுத்தொகை ரூ20.29 கோடி வழங்கப்பட்டது: டி.ஆர்.பி ராஜா எம்எல்ஏ
2020-21 குறுவை சாகுபடி காப்பீட்டுத்தொகை ரூ20.29 கோடி வழங்கப்பட்டது: டி.ஆர்.பி ராஜா எம்எல்ஏ

கடந்த ஆண்டு குறுவை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு 20.29 கோடி காப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டுள்ளது என மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய டி.ஆர்.பி ராஜா, “டெல்டா மாவட்டங்களில் கடந்த  2020 -  21 ஆம் ஆண்டு குறுவை சாகுபடி செய்யப்பட்டது. குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து இருந்தார்கள். ஆனால், பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படாமல் இருந்தது. இதற்காக விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள்.

இந்நிலையில்  தற்போது 2020 -  21 ஆண்டு குறுவை சாகுபடிக்காக பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி திருவாரூர் மாவட்டத்திற்கு 17.3 கோடியும், நாகை மாவட்டத்திற்கு 2.99 கோடியும் பயிர் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியில் பயிர் காப்பீடு செய்த 36ஆயிரம் விவசாயிகளுக்கு 20.29 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2020 - 21 ஆம் ஆண்டு டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு விரைவில் பயிர் காப்பீட்டு தொகை பெற்றுத் தரப்படும்” என தெரிவித்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com