நெல்லை: அதிசய கிணறு நிரம்பாததற்கு காரணம் என்ன? - ஐஐடி விளக்கம்

நெல்லை: அதிசய கிணறு நிரம்பாததற்கு காரணம் என்ன? - ஐஐடி விளக்கம்
நெல்லை: அதிசய கிணறு நிரம்பாததற்கு காரணம் என்ன? - ஐஐடி விளக்கம்
Published on

வழக்கமான நீர்ப்படுகைகளை விட நீரியல் கடத்தும் திறன் மிக அதிகம் இருப்பதே நெல்லை மாவட்டம் ஆயன்குளம் கிராமத்தில் உள்ள கிணறு நீரம்பாததற்கு காரணம் என்று சென்னை ஐஐடி விளக்கமளித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள திறந்தவெளி விவசாயக் கிணற்றில் விநாடிக்கு 2000லிட்டர் வீதம் தண்ணீர் செலுத்திய போதும் பல வாரங்களாக நிரம்பாமல் இருப்பதாக தகவல் வெளியானது. மேலும் டிசம்பர் மாதம் பெய்த மழையில் நிரம்பிய சிறுகுளத்தின் உபரி நீரும் இந்த கிணற்றுக்கு திருப்பி விடப்பட்டது. ஆனாலும் இந்த கிணறு நிரம்பாமல் இருந்து வந்தது. இதனால் அதிசய கிணறு என்று கிராம மக்கள் அழைத்து வந்த நிலையில், சென்னை ஐஐடி கட்டடப் பொறியாளர் துறை உதவி பேராசிரியர் வெங்கட்ராமன் ஸ்ரீனிவாசன் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இங்குள்ள 13 கிணறுகளில் இருந்தும் நீரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

இந்த நிலையில் அது தொடர்பாக, சென்னை ஐஐடி கருத்துரு ஒன்றை வழங்கியுள்ளது. அதில், பிளவுபட்ட சுண்ணாம்பு படுகையாக இந்த நிலபரப்பு இருப்பதால், வழக்கமான நீர் படுகைகளை விட நீரியல் கடத்தும் திறன் மிக அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற கிணறுகளில் நிலத்தடி நீர் மறு ஊட்டல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தினால், வெள்ளம் மற்றும் வறட்சியின் தீவிரத்தை குறைக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com