நெருங்கும் பொங்கல் பண்டிகை: கோயம்பேடு மார்கெட்டில்  கரும்பு விற்பனை மந்தம்

நெருங்கும் பொங்கல் பண்டிகை: கோயம்பேடு மார்கெட்டில்  கரும்பு விற்பனை மந்தம்
நெருங்கும் பொங்கல் பண்டிகை: கோயம்பேடு மார்கெட்டில்  கரும்பு விற்பனை மந்தம்
Published on

பொங்கல் பண்டிகைக்கு இரண்டு தினங்களே உள்ள நிலையில் கரும்பு விற்பனை மந்தமாகவே உள்ளது.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், பொங்கல் பண்டிகையில் முக்கிய பொருளாக இடம்பெறும் கரும்பு விற்பனை சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று முதல் தொடங்கியிருக்கிறது.

இந்நிலையில் விற்பனை மந்தமாக இருப்பதாகவும், கடந்த ஆண்டை விட விலை குறைவாகவே விற்பனையாவதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து லாரிகள் மூலம் கரும்புகளை கொண்டு வந்து விற்பனை செய்யும் வியாபாரிகள், தாங்கள் கொண்டு வந்ததற்கு கூட லாபம் கிடைக்கவில்லை என்று தெரிவித்தனர்.

மேலும் கடந்த ஆண்டு அதிகபட்சமாக 400 ரூபாய் வரை விற்பனையான கரும்புக் கட்டு தற்போது 200 ரூபாய் என்ற அளவிற்கு விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அதேபோல், மஞ்சள் (கொத்து 1) 20 ரூபாய்க்கும், சாமந்தி பூ ஒருகிலோ 80 முதல் 140 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com