“ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும்” - ஏரி, ஆற்றுப்பாசன சங்கம்

“ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும்” - ஏரி, ஆற்றுப்பாசன சங்கம்
“ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும்” - ஏரி, ஆற்றுப்பாசன சங்கம்
Published on

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறாவிட்டால் விவசாயிகள் சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என ஏரி மற்றும் ஆற்றுப்பாசன சங்கம் எச்சரித்துள்ளது.

புதுக்கோட்டையில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் விஸ்வநாதன் கலந்துகொண்டு உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்ட மக்களின் வாழ்வாதார பிரச்னையான காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்தை தமிழக அரசு அறிவிப்போடு மட்டுமே நிறுத்தி விடாமல், உடனடியாக வருகின்ற சட்டப்பேரவை கூட்ட தொடரில் முதற்கட்ட நிதியை ஒதுக்கி பணிகளைத் தொடங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

அத்துடன், ஹைட்ரோகார்பன் திட்டத்திற்காக கிணறுகள் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதி தேவையில்லை என்றும், சம்பந்தப்பட்ட பகுதி மக்களின் கருத்துக்களை கேட்க வேண்டியதில்லை என்றும் மத்திய அரசு அறிவித்திருப்பது கண்டனத்துக்குரியது என்றார்.

தமிழக முதலமைச்சர் இப்பிரச்னையில் உடனடியாக தலையிட்டு பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும் எனவும், மத்திய அரசின் அறிவிப்பை திரும்பப் பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இல்லையெனில் அனைத்து விவசாய சங்கங்களையும் ஒன்றிணைத்து மிகப்பெரிய போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றும் அவர் எச்சரித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com