தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், தேர்தலுக்குப் பிறகு விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டு மும்போக சாகுபடி செய்யப்பட்டது. விளைச்சல் இருந்தும் மழையால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டதோடு, நெற்பயிரை காயவைக்க முடியாமல் வீணானது. ஆனால், இந்த ஆண்டு சம்பா சாகுபடி கூடுதலாக செய்யப்பட்டது.
இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் ஏப்ரல் 1 முதல் மும்முனை மின்சாரம் தொடர்ந்து 24 மணி நேரமும் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பை நம்பி கோடை சாகுபடி தற்போது 40 ஆயிரம் ஏக்கர் அளவிற்கு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மும்முனை மின்சாரம் கடந்த இரண்டு நாட்களாக குறைந்த அளவே வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.