கொள்முதல் நிலையத்தை இழுத்து மூடிய அதிகாரிகள் - நெல் மூட்டைகளுடன் காத்திக்கும் விவசாயிகள்!

கொள்முதல் நிலையத்தை இழுத்து மூடிய அதிகாரிகள் - நெல் மூட்டைகளுடன் காத்திக்கும் விவசாயிகள்!
கொள்முதல் நிலையத்தை இழுத்து மூடிய அதிகாரிகள் - நெல் மூட்டைகளுடன் காத்திக்கும் விவசாயிகள்!
Published on

கும்பகோணம் அருகே பாபநாசம் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திடீரென மூடப்பட்டதால் 6 நாட்களாக கொள்முதல் நிலையம் முன்பு அறுவடை செய்த நெல்களை குவித்து வைத்து விவசாயிகள் காத்திருக்கிறார்கள்.

பாபநாசம் நெல் கொள்முதல் நிலையத்திற்கு, கோபுராஜபுரம், பாபநாசம், திருப்பாலத்துறை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள், தாங்கள் அறுவடை செய்த குறுவை நெல்மணிகளை விற்பனைக்காக கொண்டுவந்து குவித்து வைத்து கடந்த 6 நாட்களாக காத்து கிடக்கின்றனர்.

இதனிடையே நெல்லை கொள்முதல் செய்யக்கோரி பாபநாசம் கொள்முதல் நிலைய அலுவலரிடம் விவசாயிகள் கேட்டபோது, பாபநாசம் பகுதியில் அறுவடை பணிகள் முடிந்து விட்டதாகவும் தற்போது வெளியூர் வியாபாரிகள் நெல்லை கொண்டு வருவதால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளிடம் புகார் அளித்து கொள்முதல் நிலையத்தை மூடிவிட்டதாக தெரிவித்ததாக புகார் தெரிவிக்கின்றனர். 

பாபநாசம் பகுதியில் அறுவடை பணிகள் முடியவில்லை எனவும், தற்போது வரை 10 ஆயிரம் நெல் மூட்டைகள் தேங்கியுள்ளதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், தேங்கியிருக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com