தெலங்கானா மாநிலத்தில் அடுத்த ஆண்டிலிருந்து விவசாயத்துக்கு என தனி பட்ஜெட் போடப்படும் என அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
விவசாயத் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும் இதன் மூலம் விவசாய வளர்ச்சி விரைவு பெறும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆந்திர மாநில முதலமைச்சராக இருக்கும் சந்திரபாபு நாயுடு, விவசாயத்துக்கென தனி பட்ஜெட் போடப்படும் என்று கடந்த 2014ம் ஆண்டு அறிவித்தார். அதைப் பின்பற்றி தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவும் விவசாயத்துக்கென தனி பட்ஜெட் தாகல் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார். தெலங்கானா அரசு ரூ.17,000 கோடி மதிப்பிலான விவசாயக் கடன்களை சமீபத்தில் தள்ளுபடி செய்தது. இதன்மூலம் 35 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்று அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.