வனங்களை காக்க காட்டு மாடுகள் தேவை..!

வனங்களை காக்க காட்டு மாடுகள் தேவை..!
வனங்களை காக்க காட்டு மாடுகள் தேவை..!
Published on

வனங்கள் அழியாமல் தடுக்க காட்டு மாடுகளை காப்பது அவசியம் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், முதுமலை, ஆனைமலை, சத்தியமங்கலம், களக்காடு, சதுரகிரி போன்ற வனப்பகுதிகளில் காட்டு மாடுகள் பெருமளவு உள்ளன. தற்போதைய கணக்கின்படி 50,000 காட்டு மாடுகள் இருப்பதாகவும், அவை அழிய‌ நேர்ந்தால் உணவுக்காக புலி உள்ளிட்ட விலங்குகள் இறைத்தேடி ஊருக்குள் நுழையும் ஆபத்து உள்ளதாகவும் இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர். விவசாயத்திற்கு நாட்டு மாடுகள் எவ்வளவு அவசியமோ அதே போல் வனம் காக்க காட்டு மாடுகள் தேவை என்ற கருத்தையும் அவர்கள் முன்வைக்கின்றனர்.

தோல்களுக்காகவும், இறைச்சிகளுக்காகவும் காட்டு மாடுகள் வேட்டையாடப்படுவதை தடுக்கவேண்டும் எனவும், மேலும் காட்டு மாடுகள் அதிகமாக காணப்படும் இடங்களில் சரணாலயங்கள் அமைத்து, அவைகளின் அழிவை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com