சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாக்கு விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
சேலம் பகுதிகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர்களில் பாக்கு பயிரிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து நல்ல மழை பெய்து வருவதால் விளைச்சல் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். இந்நிலையில், வடமாநிலங்களில் பாக்கு தேவை அதிகரித்துள்ளதால் இங்கிருந்து விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. ஒரு கிலோ பாக்கு 400 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.