டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக குடியரசு தினத்தன்று போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்ட 83 விவசாயிகளுக்கு, தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீட்டை பஞ்சாப் மாநில அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கெதிராக கடந்த குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் தடையை மீறி பேரணி நடத்தினர். அப்போது கலவரம் மூண்டது. இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் நேரடியாகத் தலையிட்டு விசாரணைக்கு உத்தரவிட்டது. 83 விவசாயிகள் கைது செய்யப் பட்டனர். அன்றைய போராட்டத்தில் கைது செய்யப்பட்ட விவசாயிகள் 83 பேருக்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படுமென பஞ்சாப் மாநில அரசு அறிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு பஞ்சாப் சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக மூன்று முறை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.