ஓமலூர் வட்டாரப் பகுதிகளில் பூவிற்கு பதிலாக முள்ளங்கி விவசாயத்திற்கு விவசாயிகள் மாறியுள்ளனர்.
முத்துநாயக்கன்பட்டி, கஞ்சநாயக்கன்ப்பட்டி, பூசாரிப்பட்டி, சிக்கனம்பட்டி தீவட்டிப்பட்டி, உட்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் முள்ளங்கி விவசாயத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பெற்று முள்ளங்கி போன்ற குறுகிய காலப் பயிர்களைச் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். முள்ளங்கி சாகுபடிக்கு குறைந்த அளவே தண்ணீர் தேவைப்படும் என்றும் பரமாரிப்பு செலவும் குறைவாகவே இருப்பதாகவும் அதேநேரம் அதிக லாபம் கிடைப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.