தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்ய புதிய திட்டம்

தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்ய புதிய திட்டம்
தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்ய புதிய திட்டம்
Published on

தென்னை மரங்களை காப்பீடு செய்ய புதிய திட்டம் ஒன்றை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால், தென்னை மரங்களை காப்பீடு செய்ய அரசு அறிவுறுத்தி உள்ளது. ஒரு ஹெக்டேருக்கு 175 மரங்கள் மட்டுமே காப்பீடு செய்ய தகுதி பெற்றவை என்றும், குறைந்தபட்சம் 5 மரங்களை வளர்க்கும் விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டால் மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என்றும், மரங்களின் வயதுக்கு ஏற்ப ரூ.900 முதல் ரூ.1,450 வரை இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு விவரங்கள் கணக்கிடும்போது முறைகேடுகளில் ஈடுபட்டது தெரியவந்தால், இழப்பீடு வழங்கப்படாது என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு வேளாண் உதவி இயக்குநர் அல்லது சம்பந்தப்பட்ட காப்பீடு நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com