வேளாண் பட்ஜெட்: பண்ருட்டியில் பலாப்பழ சிறப்பு மையம்; வடலூரில் அரசு தோட்டக்கலை பூங்கா

வேளாண் பட்ஜெட்: பண்ருட்டியில் பலாப்பழ சிறப்பு மையம்; வடலூரில் அரசு தோட்டக்கலை பூங்கா
வேளாண் பட்ஜெட்: பண்ருட்டியில் பலாப்பழ சிறப்பு மையம்; வடலூரில் அரசு தோட்டக்கலை பூங்கா
Published on
பண்ருட்டியில் பலாப்பழ சிறப்பு மையம், வடலூரில் அரசு தோட்டக்கலை பூங்கா அமைக்கப்படும் என்று வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை வரலாற்றில், முதல் முறையாக வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட் தாக்கலாகியுள்ளது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், வேளாண் துறைக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதன் ஒரு பகுதியாக, கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டாரத்தில் பலாப்பழ பயிருக்கான சிறப்பு மையம் அமைக்கப்படும் என்றும் கடலூர் மாவட்டம் வடலூரில் ரூ.1 கோடியில் புதிதாக அரசு தோட்டக்கலை பூங்கா அமைக்கப்படும் என்றும் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
அனைத்து நிலங்களிலும் விளையக்கூடிய தோட்டப்பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்வதை அரசு ஊக்குவிக்கும் என அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com