‘மணக்காமல்’ போகும் ஏலக்காய் விற்பனை... 10 மடங்கு சரிந்த விலையால் விவசாயிகள் கவலை

‘மணக்காமல்’ போகும் ஏலக்காய் விற்பனை... 10 மடங்கு சரிந்த விலையால் விவசாயிகள் கவலை
‘மணக்காமல்’ போகும் ஏலக்காய் விற்பனை... 10 மடங்கு சரிந்த விலையால் விவசாயிகள் கவலை
Published on

கேரள மாநிலம் இடுக்கியில் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து  ஏலக்காய் விலை வீழ்ச்சியடைந்து வருகிறது. தீபாவளி பண்டிகையை ஒட்டி விலையேறும் என எதிர்பார்த்த விவசாயிகளுக்கு தொடர்ந்து ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

"நறுமணப் பொருட்களின் ராணி" எனப்படும் ஏலக்காய் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் பிரதான சுற்றுலா தொழிலுக்கு அடுத்து முதலிடம் பிடிக்கிறது. இந்திய ஏலக்காய் மொத்த உற்பத்தியில் 60 சதவீதம் கேரளாவிலும், 30 சதவீதம் கர்நாடகாவிலும், மீதமுள்ள 10 சதவீதம் தமிழகம், அஸ்ஸாம் என இதர மாநிலங்களிலும் விளைகின்றன.

கேரளாவின் மொத்த ஏலக்காய் உற்பத்தியில் அதிக சதவீதமான 80 சதவீத ஏலக்காய் உற்பத்தி இடுக்கி மாவட்டத்தில்தான் நடக்கிறது. இந்த ஏலக்காய் விவசாயம் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் நடப்பதோடு பல ஆயிரம் கோடி ரூபாய் அந்நியச் செலவாணியையும் ஏலக்காய் ஈட்டித் தருகிறது. இத்தனை முக்கியத்துவம் பெற்ற ஏலக்காய் விலை கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் அதிகபட்சமாக ஒரு கிலோ 7,000 ரூபாயை கடந்து விற்பனையானது.

அதற்கு அடுத்து வந்த இரண்டு ஆண்டுகள் கொரோனா முடக்கத்தால் ஏற்றுமதி முழுவதும் நின்று, உள்நாட்டு ஏலக்காய் வர்த்தகமும் தடைபட்டு ஏலக்காய் விலை 10 மடங்கு வீழ்ச்சி அடைந்தது. லட்சக்கணக்கான டன் ஏலக்காய் விற்பனையாகாமல் தேக்கமடைந்த நிலையில் விளைச்சல் அமோகமாகி ஏலக்காய் வரத்தும் அதிகரித்தால் ஏலக்காயின் இருப்பு அதிகரித்து விலை வீழ்ந்தது.

கொரோனா முடக்கம் கடந்து இயல்பு நிலை திரும்பி ஏலம், ஏற்றுமதி ஆகியன துவங்கினாலும் இடைவிடாத வரத்தால்,  மூன்று ஆண்டுகளாக ஏலக்காய் இருப்பு அதிகரித்து விட்டது. அதோடு உலக சந்தையில் அமெரிக்காவின் கோதிமலா ஏலக்காய் கொட்ட ஆரம்பித்தது. இது இந்திய ஏலக்காய் விலையை அடியோடு வீழ்த்தியது. இடுக்கி ஏலக்காயில் பூச்சி மருந்து பயன்பாடு அதிகரிப்பு,  ஏலக்காயில் பச்சை நிற செயற்கை ரசாயன நிறமேற்றுதல் ஆகியன பல வளைகுடா நாடுகள் இந்திய ஏலக்காயை புறக்கணித்து திரும்ப அனுப்பின.

இதனால் கடந்த மூன்று ஆண்டுகளாக இடுக்கில் ஏலக்காய் விலை கிலோ அதிகபட்சமாக 1,200 ரூபாய்க்கும் சராசரியாக கிலோ 900 ரூபாய் முதல் 1,000 ரூபாய்க்குள்ளும் விலை போகிறது. தீபாவளி பண்டிகையை ஒட்டி விலையேறும் என எதிர்பார்த்த விவசாயிகளுக்கு தொடர்ந்து ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஏற்றம் பெறாத ஏலக்காய் விலையால் இடுக்கி  ஏலக்காய் விவசாயிகள் மட்டுமின்றி இடுக்கியில் அதிக ஏலத்தோட்டங்கள் வைத்திருக்கும் தமிழக விவசாயிகளும் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.

இதையும் படிக்கலாமே: ”நட்பு எதையும் தாங்கும்” - 75 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த நண்பர்களின் நெகிழ்ச்சி தருணம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com