தற்போது இடுக்கி மாவட்டம் மூணாறு, வட்டவடா, மறையூர், காந்தலூர் பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் ஸ்ட்ராபெர்ரி பயிரிடப்பட்டுள்ளது. ரெட் சில்லி, விண்ட்டர் டோன் ஆகிய இரு வகை ஸ்ர்டாபெர்ரி செடிகள் அதிகம் பயிரிடப்பட்டு உள்ளன. மூணாறுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஸ்ட்ராபெர்ரி தோட்டங்களை கண்டு ரசிப்பதோடு பழங்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளாத கொரோனா முடக்கத்தால் மூணாறுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவாக இருந்தது. அப்போதெல்லாம் ஒரு கிலோ ஸ்ட்ராபெரி பழம் 250 ரூபாய்க்கும், 100 கிராம் ஸ்ட்ராபெரி ஜாம் 150 ரூபாய்க்கும் விற்பனையானது.