மத்திய அரசு ஒரு கட்சியால் நடத்தப்படவில்லை, அது கம்பெனியால் நடத்தப்படுகிறது என்று பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிக்கைட் தெரிவித்தார்
இது தொடர்பாக பேசிய பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிக்கைட், "மத்திய அரசை ஒரு அரசியல் கட்சி நடத்தவில்லை, ஒரு நிறுவனம் நடத்துகிறது. அதனால்தான் எந்த விவாதமும் நடத்தப்படுவதில்லை" என்றார். மேலும், "அரசு, பண்ணை சட்டங்களை ரத்து செய்ய மாட்டோம், ஆனால் விவாதத்திற்கு தயாராக இருக்கிறோம் என்று கூறி ஒரு முரண்பாடான நிபந்தனையை முன்வைக்கின்றனர்" எனத் தெரிவித்தார்
கடந்த 2020-ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக, கடந்த நவம்பர் மாதம் முதல் 7 மாதங்களாக விவசாயிகள் டெல்லி எல்லைகளில் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். அரசுக்கும், விவசாய சங்கங்களுக்கும் இடையே நடந்த பலகட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்த நிலையில் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது.