பிப்ரவரி மாதம் முதலே தூர்வாருவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்கவேண்டும்: பி.ஆர்.பாண்டியன்

பிப்ரவரி மாதம் முதலே தூர்வாருவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்கவேண்டும்: பி.ஆர்.பாண்டியன்
பிப்ரவரி மாதம் முதலே தூர்வாருவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்கவேண்டும்: பி.ஆர்.பாண்டியன்
Published on

தூர் வாருவதற்கு ஜனவரி மாதமே நிரந்தர அரசாணை விடுவித்து பிப்ரவரி மாதம் முதல் ஆண்டு தோறும் தூர்வாருவதற்கான நிரந்தர நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும், நாராயணசாமி நாயுடு அவர்கள் நினைவாக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 விலை நிர்ணயம் செய்திட தமிழக முதலமைச்சருக்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பிஆர் பாண்டியன் வேண்டுகோள் வைத்துள்ளார்.

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில், நாராயணசாமி நாயுடு அவர்களின் 37ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு திருவாரூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் அவரது படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன், “ தமிழ்நாட்டில் விவசாயிகள் விடுதலைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு போராட்டத் தளபதியாக விளங்கியவர் நாராயணசாமி நாயுடு அவர்கள். இலவச மின்சாரத்தை பெற்றுக்கொடுத்து தமிழகத்தில் விவசாய உற்பத்தியை பெருக்குவதற்கு அடித்தளமிட்டவர் ,எனவே அவர் நினைவைப் போற்றும் வகையில் விவசாய குடும்பங்கள் தோறும் நினைவஞ்சலியை இன்று செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் புதிய ஆட்சி பொறுப்பேற்றுள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு முதல் சேலம் மாவட்டம் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் மானியம் மூலம் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து இலவச மின் இணைப்பு கொடுக்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்தவர்களுக்கு, இதுவரையிலும் மானியங்கள் வழங்கப்பட்டதே தவிர, மின் இணைப்பு வழங்கப்படவில்லை. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 37 நபர்களுக்கு மின் இணைப்பு வழங்காமல் காத்திருப்பில் உள்ளனர். எனவே மானியம் விடுவிக்கப்பட்ட அனைவருக்கும் இலவச மின் இணைப்பு வழங்க வேண்டும். தமிழகத்தில் உரத் தட்டுப்பாட்டை போக்குவதற்கு தமிழக அரசாங்கம் போர்க்கால நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

தூர் வாருவதற்கு ஜனவரி மாதமே நிரந்தர அரசாணை விடுவித்து பிப்ரவரி மாதம் முதல் ஆண்டு தோறும் தூர் வாறுவதற்கான நிரந்தர நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும், குடிமராமத்து திட்டத்தை பிப்ரவரி மாதமே துவங்குவதற்கு அனுமதி வழங்கிட வேண்டும். திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதன் அடிப்படையில் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ 2,500 ரூபாய் ஐயா நாராயணசாமி அவருடைய நினைவாக வழங்கி விவசாயிகளை பாதுகாக்க முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறோம்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com