இலவச மின்சாரம்... எப்போதிருந்து நடைமுறைக்கு வந்தது?

இலவச மின்சாரம்... எப்போதிருந்து நடைமுறைக்கு வந்தது?
இலவச மின்சாரம்... எப்போதிருந்து நடைமுறைக்கு வந்தது?
Published on

தற்போது விவாதத்திற்கு உள்ளாகியிருக்கும் இலவச மின்சார திட்டம், தமிழகத்தில் எப்போதிருந்து நடைமுறைக்கு வந்தது?

தமிழகத்தில் 1983 ஆம் ஆண்டில் முதன் முதலாக குறு விவசாயிகளுக்கு ஒரு ஹெச்.பி. குதிரைத் திறன் கொண்ட பம்புசெட் மோட்டாருக்கு மின் இணைப்புக்கு இலவச மின்சாரம் தரப்பட்டது. 1989 ஆம் ஆண்டு விவசாயிகளுக்கு 5 ஹெச்.பி. குதிரைத் திறன் கொண்ட பம்புசெட் மோட்டார் வரை பயன்படுத்தி இலவச மின்சாரம் பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. டெல்டா மாவட்டங்களிலேயே நிலத்தடி நீர் மட்டம் 300 அடிக்கும் கீழே சென்றுவிட்டதால் விவசாயிகள் 10 ஹெச்பி குதிரைத் திறன் கொண்ட மோட்டார்களையும் முறைகேடாக பயன்படுத்தியதாக புகார் எழுந்தது.

முறைகேடுகளை தடுக்கவும், வழித்தடங்களில் மின்இழப்பை தவிர்க்கவும். 2010 ஆம் ஆண்டில் தமிழக அரசே விவசாயிகளுக்கு இலவசமாக 5 ஹெச்பி திறன் கொண்ட புதிய மோட்டாரையும், மின்பயனீட்டு அளவை கணக்கிடும் மீட்டரையும் பொருத்தத் தொடங்கியது. விவசாயிகள் எதிர்ப்பால் சில நாளில் திட்டம் கைவிடப்பட்டது. இலவச மின்சாரத் திட்டத்திற்காக ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் கோடி வரை மின்சார வாரியத்திற்கு தமிழக அரசு இழப்பீடு அளித்து வருகிறது.

அரசு இழப்பீடு அளிப்பதை கைவிட வேண்டும் என்றும், மின்சார பயன்பாட்டை அறிய அனைத்து இணைப்புகளுக்கும் மீட்டா் பொருத்த வேண்டுமென்றும் மத்திய அரசின் உதய் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது. உதய் திட்டத்தில் தமிழக அரசு இணைந்ததால், விவசாயிகளின் மின் இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தும் பணி மீண்டும் துவங்கியது. மீட்டர் பொருத்தப்பட்ட பின்பு, இலவச மின்சாரம் ரத்தாகும் என விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். தற்போது தமிழகத்தில் 20 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் இலவச மின்சாரம் பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com