வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: சுதந்திர தினத்திற்காக விவசாயிகள் டிராக்டர் பேரணி ஒத்திகை

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: சுதந்திர தினத்திற்காக விவசாயிகள் டிராக்டர் பேரணி ஒத்திகை

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: சுதந்திர தினத்திற்காக விவசாயிகள் டிராக்டர் பேரணி ஒத்திகை
Published on

ஹரியானாவில் சுதந்திர தினத்திற்காக 'டிராக்டர் பேரணியை' திட்டமிட்டுள்ள மூன்று வேளாண் சட்ட எதிர்ப்பு விவசாயிகள், அதற்காக இன்று ஒத்திகை நடத்தினர்.

ஹரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தில் உச்சன கலன் பகுதியில் விவசாயிகள் இந்த டிராக்டர் பேரணி ஒத்திகையை நடத்தினார்கள். நாளை இந்த டிராக்டர் பேரணியில் சுமார் 5,000 வாகனங்களும், 20,000 விவசாயிகளும் அணிவகுப்பில் பங்கேற்பார்கள் என்று ஒரு விவசாயி கூறினார்.

இது தொடர்பாக பேசிய அவர், "இந்த போராட்டத்திற்கு பெண்கள் தலைமை தாங்குகிறார்கள். நாங்கள் எதையும் உடைக்க விரும்பவில்லை, எங்கள் நிலையை அரசாங்கத்திற்கு காட்ட விரும்புகிறோம்" என்று கூறினார்.

கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி முதல் மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் கலவரம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com