தஞ்சை மாவட்டத்தில் 450 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 190 நிலையங்கள் மட்டுமே திறக்கப்பட்டிருப்பதாகவும் இதனால் நெல் மூட்டைகள் தேங்குவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கோடை நெல் சாகுபடியையே விவசாயிகள் நம்பியிருந்தனர். தஞ்சையில் மட்டும் 47ஆயிரம் ஏக்கரில் கோடை நெல் சாகுபடி நடைபெற்றது. அறுவடை பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், கொள்முதல் நிலையங்கள் திறக்கபடாததால் நெல் மூட்டைகள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், 450 நெல் கொள்முதல் நிலையங்களில் 190 மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. அதிகாரிகளின் மெத்தனமே இதற்கு காரணம் என்றும் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.