வறட்சியால் காய்ந்த தென்னை மரங்கள்: இழப்பீடு கோரும் விவசாயிகள்

வறட்சியால் காய்ந்த தென்னை மரங்கள்: இழப்பீடு கோரும் விவசாயிகள்
வறட்சியால் காய்ந்த தென்னை மரங்கள்: இழப்பீடு கோரும் விவசாயிகள்
Published on

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதியில் வறட்சியால் தென்னை மரங்கள் காய்வதால் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தமிழகத்தில் கடந்தாண்டு பருவமழை பொய்த்ததால் பல இடங்களில் வறட்சியே நிலவி வருகிறது. முப்போகம் விளைந்த டெல்டா மாவட்டத்தில் இந்தாண்டு ஒருபோகம் கூட விளையாததால் விவசாயிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். இதனிடையே, விருதுநகர் மாவட்டத்தில் நிலவும் வறட்சி காரணமாக ஏராளமான தென்னை மரங்கள் காய்ந்து வருகிறது. இதனால் ஏராளமான விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

விருதுநகரின் எட்டக்காபட்டி, கோமாளிபட்டி, விஜயகரிசல்குளம், துரைசாமியாபுரம் உள்ளிட்ட ஊர்களில் 300 ஏக்கர் பரப்பளவில் தென்னை மரங்கள் நடப்பட்டுள்ளன. இந்நிலையில் வறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னை மரம் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கினால் மட்டுமே மரத்தை காப்பற்ற ஏதேனும் செய்ய முடியும் என தென்னை விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com