கோவையில் விவசாய நிலத்தில் தனியார் நிறுவனத்தின் வேதிக்கழிவுகளை கொட்டிய வாகனத்தை ஊர்மக்கள் அடித்து உடைத்தனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் வலையபாளையத்தில் மார்ஸ் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. ஆட்டோ மொபைல் உதிரிபாக உற்பத்தி செய்யப்படும் இந்நிறுவனத்தின் கழிவுகளை அடிக்கடி அப்பகுதியில் உள்ள கிராம பகுதிகளில் வாகனங்கள் மூவமாக கொட்டப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த முறை வேதிக்கழிவை விவசாய நிலத்தில் கொட்டியபோது அப்பகுதி மக்கள் வாகனத்தை பிடித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்து கண்டித்துள்ளனர்.
இந்நிலையில், மீண்டும் நேற்று அதேபோல் அந்நிறுவனத்தில் இருந்து வேதிக்கழிவுகளை அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் கொட்டப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் வாகனத்தை சிறைபிடித்து அடித்து உடைத்ததோடு நிறுவனத்தாரிடம் மீண்டும் முறையிட்டுள்ளனர். தங்கள் நிறுவனம் வேதிக் கழிவுகளை வெகியேற்றும் பணியை தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் கொடுத்திருப்பதாகவும் ஒப்பந்தாரர் மேற்கொண்ட இந்நடவடிக்கைக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை எனத் தெரிவித்தனர்.
இதனையடுத்து ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க ஊர்மக்கள் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தனர்.