விளைபொருட்களுக்கு கட்டுப்படியாகும் விலையை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்துவதற்காக திருச்சியிலிருந்து விவசாயிகள் புறப்பட்டனர்.
விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபமாக, ஒரு கிலோ நெல்லுக்கு ஆதார விலை 54 ரூபாய் வழங்கப்படும் என மத்திய பாஜக அரசு 2019 ஆம் ஆண்டு தேர்தலில் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், தற்போது சுமார் 20 ரூபாய் மட்டுமே வழங்கப்படவதாகவும், கரும்பு டன்னுக்கு 8 ஆயிரத்து 100 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்த நிலையில், 2 ஆயிரத்து 900 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
இதை கண்டித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தச் செல்ல திருச்சியில் இருந்து ரயில் மூலம் அவர்கள் சென்னை நோக்கி புறப்பட்டனர்.