தமிழகம் முழுவதும் 25 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நடவு மற்றும் நேரடி நெல் விதைப்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளன நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் மொத்தமாக மூன்று லட்சத்து 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 22 ஆம் தேதியுடன் சம்பா மற்றும் தாளடி பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கான கால நீட்டிப்பு முடிவடைந்துள்ள நிலையில் 3,17,012.5 ஏக்கர் பரப்பளவு பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மொத்தமாக 18 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை வேளாண்மை பயிர் காப்பீட்டுத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.