சென்ற வார கல்வி இதழில்

வெற்றி வாசல் – 20

எதிர்மறை எண்ணங்களை தவிர்ப்போம்!

-மாறன்

 

மருத்துவமனையில் டாக்டரைப் பார்க்க நோயாளிகள் அமர்ந்திருந்தனர். அப்போது ஒரு முதியவர் ரிசப்ஷனிஸ்டிடம்,  மேடம் என்னுடைய அப்பாயின்மெண்ட் 10 மணிக்கு கொடுத்திருந்தீர்கள். இப்போது 11 மணி ஆகிறது. இதற்கு மேலும் என்னால் காத்திருக்க முடியாது. என்னோட அப்பாயின்ட்மெண்டை வேறு ஒரு நாளுக்கு மாற்றிக்கொடுங்கள்" என்றார்.

 

அதற்கு, அந்தப் பெண், என்ன சார்? உங்களுக்கோ 80 வயசுக்கு மேலாகிறது. இனிமே என்ன பெரிசா வேலை இருக்கப்போகிறது. 

 

கொஞ்சம் வெயிட் பண்ணுங்களேன்" என்றார்.

 

உடனே, பெரியவரோ மேடம், நீங்கள் எனக்கு 80 வயசுக்கு மேலாகிவிட்டது என்று சொன்னீர்களே. அதுதான் காரணம். நான் எஞ்சியுள்ள என் வாழ்நாட்களையும் வீணாக்க விரும்பவில்லை. பயனுள்ளதாகவே அமைத்துக் கொள்ள விரும்புகிறேன்" என ஆணித்தரமாகக் கூறினார்.

 

நண்பர்களே, ஒருவரின் தற்போதைய வயது  30 என வைத்துக்கொள்வோம். நமது சராசரி ஆயுட்கால வயது 72 என்று எடுத்துக் கொள்ளும்பட்சத்தில் மீதி 42 ஆண்டுகள் அவருக்கு உள்ளன.

 

நாம் ஒரு நாளைக்கு சராசரியாக 7 மணிநேரம் தூங்குகிறோம். அப்படியானால், 12 ஆண்டுகள் தூக்கத்தில் கழிந்துவிடும். மீதமுள்ள 30 ஆண்டுகளில் நம் அலுவலகப் பணிகளுக்கென 50 முதல் 60 மணிநேரம் ஒரு வாரத்தில் செலவு செய்வதாக எடுத்துக்கொண்டால், 14 ஆண்டுகள் அதில் ஓடிவிடும்.

 

ஒரு நாளில் நமது சொந்த வேலைகளான குளிப்பது, சாப்பிடுவது, உடை மாற்றுவது, பேப்பர் படிப்பது போன்ற இன்ன பிற வேலைகளைச் செய்ய 4 முதல் 5 மணிநேரம் செலவிடுகிறோம். இதையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் 8 ஆண்டுகளாகும். பொழுதுபோக்குகளுக்காக தினமும் குறைந்தபடசம் 2 மணிநேரம் என எடுத்துக்கொண்டால், மூன்றரை ஆண்டுகள் ஓடிவிடும். ஆக 72 வயதுவரை வாழும் நிலையிலுள்ள ஒருவர் உடற்பயிற்சிக்கென வாரத்திற்கு 6 மணிநேரம் ஒதுக்கும்பட்சத்தில்... 

 

 

 

 

மேலும்...

Add comment


பெயர் *
மின்னஞ்சல் *
கருத்து
 

 
Security code
Refresh

 
 
Your Cart
Cart empty
 x