சென்ற வார கல்வி இதழில்

எம்பிபிஎஸ் படித்தாலும் தகுதித்தேர்வு!t

எம்பிபிஎஸ் படித்து முடித்த மாணவர்கள் தகுதித்தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றால்தான் இந்திய மருத்துவக் கவுன்சிலில் டாக்டராகப் பதிவு செய்ய முடியும் என்ற புதிய விதிமுறையை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 

எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு கட்டாயமாகியுள்ளது. இதுவரை, நுழைவுத்தேர்வு இல்லாமல் எம்பிபிஎஸ், பிடிஎஸ் அட்மிஷன் பெற்ற தமிழக மாணவர்கள் வரும் ஆண்டில் நீட் தேர்வை எழுதவேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளனர். 

 

இதற்கிடையே, எம்பிபிஎஸ்  படித்து முடித்த மாணவர்கள் தகுதித்தேர்வை ( National Exit Test - NEXT) எழுத வேண்டும் என்ற புதிய முறையைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, இந்திய மருத்துவக் கவுன்சில் திருத்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான நகல் மசோதா தயாரிக்கப்பட்டு, அதுகுறித்து பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டறிவதற்காக வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்டால், இதில் உள்ள புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்து விடும்.

 

இந்த புதிய சட்டத்திருத்த மசோதாவில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்களின் விவரம்: எம்பிபிஎஸ் பட்ட மாணவர்கள் இறுதி ஆண்டு மருத்துவப் படிப்பில் தேர்ச்சி பெற்று, உள்ளுரை மருத்துவர்களாக பயிற்சியை முடித்த பிறகு தேசிய அளவிலான தகுதித்தேர்வை (NEXT) எழுதவேண்டும். அந்தத் தேர்வில் வெற்றிபெற்றால்தான் இந்திய மருத்துவக் கவுன்சிலில் மருத்துவராகப் பதிவு செய்து கொண்டு மருத்துவப் பணியில் சேர முடியும். 

 

இந்தத் தகுதித்தேர்வை முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத்தேர்வாகவும் கருதப்படும். அதாவது, இந்த மதிப்பெண்களை வைத்துதான்...

 

 

 

 

மேலும்...

Add comment


பெயர் *
மின்னஞ்சல் *
கருத்து
 

 
Security code
Refresh

 
 
Your Cart
Cart empty
 x