சென்ற வார இதழில்

“வாடிவாசல் திறக்கணும் ஜல்லிக்கட்டு நடக்கணும்!”

-எல்லுச்சாமி கார்த்திக்

 

இந்த  ஆண்டாவது ‘ஜல்லிக்கட்டு’ நடக்குமா என்று ஒட்டுமொத்த தமிழகமும் ஆவலாய் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தனி ஒருவராக பைக்கில் பயணம் செய்து ஆதரவை திரட்டிக் கொண்டிருக்கிறார் புதுவையைச் சேர்ந்த இளம் பெண் மகேஸ்வரி.

 

புதுவை - சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த அவரது வண்டியை நிறுத்தி அவரிடம் பேசினோம்:

 

ஸ்கூல் படிச்சப்பவே பொங்கல் திருவிழாவென்றால் ரொம்பப் பிடிக்கும். பொங்கலுக்காக அப்பாவின் சொந்த ஊரான புதுக்கோட்டை பக்கமுள்ள கிராமத்திற்குப் போவோம். பொங்கல் கொண்டாடிவிட்டு சிராவயலில் ஜல்லிக்கட்டையும் பார்த்துவிட்டுத்தான் பாண்டிச்சேரி திரும்புவோம். காலேஜ் சேர்ந்த பின்னர் ஊருக்குப் போக முடியல. இருந்தாலும் பொங்கலின் போது ஜல்லிக்கட்டை டிவியில் லைவாகப் பாப்பேன்.

 

ஜல்லிக்கட்டுக் காளைகளை வதைக்கின்றனர் என பொங்கிய சில தன்னார்வ அமைப்புகள் நீதிமன்றத்தில் தப்பான தகவலைக் கொடுத்து, ரெண்டு வருஷமா ஜல்லிக்கட்டை நடத்த விடாம முட்டுக்கட்டை போட்டுள்ளது..." என வருந்தும் மகேஸ்வரி நம்ம ஊரு டிவிஎஸ் வண்டி துவங்கி ராயல் என்ஃபீல்டு புல்லட் என அனைத்து ரக மோட்டார் பைக்குகளையும் ஓட்டுவதில் வல்லவர்.

 

நீண்ட தூரம் பைக்கில் பயணம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ள மகேஸ்வரி புதுவையிலிருந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் நண்பர்களின் துணையோடு பைக்கில் சென்று வந்துள்ளார். 

 

ஜல்லிக்கட்டுக்காக தமிழக மக்களின் ஆதரவை திரட்டும் பைக் பயணம் குறித்து மேலும் தொடர்ந்த அவர் பல ஆயிரம் வருஷமா ஜல்லிக்கட்டை தமிழ் மக்கள் விளையாடி வருகின்றனர்.  பிரிட்டிஷ்காரங்க ஆண்ட போதே நம்மிடமிருந்த பொருளை எல்லாம் எடுத்துச் செல்ல முடிந்த அவர்களால் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை எதுவுமே செய்ய முடியவில்லை. அவங்களே ஜல்லிக்கட்டை தமிழர்களின் வீர  விளையாட்டாக மட்டுமே பார்த்துள்ளனர்...

 

 

 

மேலும்...

Add comment


பெயர் *
மின்னஞ்சல் *
கருத்து
 

 
Security code
Refresh

 
 
Your Cart
Cart empty
 x