சென்ற வார இதழில்

சவாலே சமாளி 2017

-ஆர். மணி

 

புத்தாண்டு 2017 பிறந்துவிட்டது.  ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்" என்றார் கவியரசர் கண்ணதாசன். 

 

கடந்து போகும் ஒவ்வோர் ஆண்டும் தனி மனிதர்களுக்கு மட்டுமல்ல, நாடுகளுக்கும்கூட வயதைக் கூட்டிக் கொண்டுதான் இருக்கிறது. கடந்த 2016 இந்திய வரலாற்றில் மிக முக்கியமான ஆண்டாகத்தான் இருக்கப் போகிறது. காரணம் 500, 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாதென்ற மோடியின் காசழிப்பு அறிவிப்பு. 2016ல் ஜெ மறைவு, சென்னையை புரட்டிப் போட்ட வார்தா புயல் போன்ற பல விஷயங்கள் இருந்தாலும், பண மதிப்பிழப்பிற்காக மட்டுமே பிரதானமாக இந்திய வரலாற்றில் இடம்பெறும். 

 

தமிழகத்தைப் பொறுத்த வரையில் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் மாபெரும் சவால்கள் 2017ல் காத்திருக்கின்றன. மாநிலத்தின் செல்வாக்கு மிக்க முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்து விட்டார். அரசியல் ரீதியில் ஏற்பட்டிருக்கும் மிகப் பெரியதோர் வெற்றிடத்தை தற்காலிகமாக ஓபிஎஸ் இட்டு நிரப்பிக் கொண்டிருக்கிறார். ஆனால், இது தற்காலிகமானது என்று எல்லோருக்கும் நன்றாகவே தெரிந்திருக்கிறது. அஇஅதிமுக பொதுச் செயலாளராகிவிட்ட சசிகலா விரைவில் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என்பதுதான் அஇஅதிமுகவில் உள்ள அனைத்து அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களின் கருத்தாக உள்ளது. 

 

ஆனால், கட்சித் தொண்டர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு நிலவுகிறது. 90 சதவிகிதத்திற்கும் மேலேயே கட்சித் தொண்டர்கள் இன்று சசிகலாவை எதிர்க்கின்றனர். பொதுமக்கள் மத்தியில், 99 சதவிகிதத்திற்கு மேலேயே இன்று சசிகலாவை ஏற்க மறுக்கின்றனர். 

 

இது ஓர் அசாதாரணமான யதார்த்தம். பொது மக்களில் 99 சதவிகிதத்திற்கு மேலேயும், சொந்தக் கட்சித் தொண்டர்களிலேயே 90 சதவிகிதத்திற்கு மேலேயே ஒருவருக்கு எதிர்ப்பு நிலவும் சூழலிலும் அவர் ஆளும் கட்சியின் பொதுச் செயலாளராக வர முடிந்திருக்கிறது. இன்னும் சில நாட்களில் அவர் முதலமைச்சராகவும் ஆகவிருக்கிறார் என்கின்றனர் ஆரூடர்கள். 

 

தமிழகத்தின் பொது வாழ்வின் கருத்தோட்டத்தை மைய நீரோட்டம் என்று நாம்...

 

 

 

மேலும்...

Add comment


பெயர் *
மின்னஞ்சல் *
கருத்து
 

 
Security code
Refresh

 
 
Your Cart
Cart empty
 x