சென்ற வார இதழில்

ஒரே ஒரு எம்.ஜி.ஆர்.

-துரை கருணா

 

1977 -  தமிழக அரசியலில் மிக முக்கிய திருப்பத்தை ஏற்படுத்திய ஆண்டு. அரசியல் களத்தில் தொடர் வெற்றிகளை குவித்த எம்.ஜி.ஆர். ஆட்சி பீடம் ஏறிய ஆண்டு.அதுமட்டுமல்ல, அகில இந்திய அளவிலும் ஆட்சி மாற்றத்திற்கு, குறிப்பாக கூட்டணி ஆட்சிக்கு அடித்தளமிட்டதும் 1977-ஆம் ஆண்டுதான். 

 

அந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டில் அண்ணா திமுகவுடன் இந்திரா காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இந்தக் கூட்டணி புதுச்சேரி உள்ளிட்ட மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 36-ல் மகத்தான வெற்றி பெற்றது. அண்ணா திமுகவுக்கு - 19, இந்திரா காங்கிரசுக்கு - 14, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு - 3 இடங்கள் கிடைத்தன. வடநாட்டில் இந்திரா காங்கிரஸ் பெரும் சரிவைச் சந்தித்த வேளையில் தமிழகத்தின் வெற்றி, இந்திரா காந்திக்கு சற்று ஆறுதலை அளித்தது.

 

இந்தத் தேர்தல் முடிவால், சுதந்திரத்திற்குப் பிறகு, 1977 வரையிலும் மத்தியில் தொடர்ந்து ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அப்புறப்படுத்தப் பட்டது. பல்வேறு அரசியல் ஜாம்பவான்களை உள்ளடக்கிய ஜனதா கட்சி டெல்லியில் ஆட்சி அமைத்தது.

 

1977 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஏற்பட்ட படுதோல்விக்கு பொறுப்பேற்ற அக்கட்சியின் தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் நெடுஞ்செழியன் ஆகியோர் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்தனர். பின்னர் திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டதற்கிணங்க ராஜினாமாவை திரும்பப் பெற்றனர்.

 

ஆனாலும், நாடாளுமன்றத் தோல்விக்குப் பின்னர் திமுகவில் தொடர விரும்பாத நெடுஞ்செழியன், செ.மாதவன், க.ராசாராம் உள்ளிட்ட சில முன்னணித் தலைவர்கள்... 

 

 

 

 

 

 

 

மேலும்...

Add comment


பெயர் *
மின்னஞ்சல் *
கருத்து
 

 
Security code
Refresh

 
 
Your Cart
Cart empty
 x