சென்ற வார இதழில்

இவள் இப்படித்தான்

-லதா அருணாச்சலம்


ஒவ்வொரு விடியலும்  ஒரு புதிய நாளாக மட்டும் மலர்வதில்லை.ஒரு புதுமையை, புதிய பொருளை, புதிய சிந்தனையை உடன் ஏந்தி வருகிறது. அதனால்தான் மாற்றங்கள் அனுதினமும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. கடந்த இருபது முப்பது ஆண்டுகளில், மனிதனின் எண்ணங்களால், தொழில்நுட்பத்தால், வாழ்க்கையின் போக்கு பல மடங்கு மாறி விட்டது. ஆனால், எத்தனை மாறினாலும் மாறாத ஒன்றே ஒன்று மனிதனின் ரசனை. அதிலும் இலக்கியம், இசை, திரைப்படங்கள் இம்மூன்றிலும் என்றும் தீராத ரசனை கொண்டவர்களாகவே இருக்கிறோம். அதிமுக்கியமாக திரைப்படங்களின்பால் நாம் கொண்டிருக்கும் மீளாக் காதல் அதை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.


ஒவ்வொரு காலகட்டத்திலும் கதையும், மாந்தர்களும் மாறிக் கொண்டே இருந்தாலும் நம் ரசனை அத்தனைக்கும் ஈடு கொடுக்கிறது. எத்தனை திரையரங்குகள் இருந்தாலும் அத்தனையிலும் கூட்டம் அலைமோதுகிறது. பத்திரிகையில் எழுதுகிறார்கள். யூடியூபில் படத்தின் முன்னோட்டத்தை வெளியிடுகிறார்கள். ஒவ்வொரு பகுதியாக இணையத்தில் அக்குவேறு ஆணிவேறாக அலசிப் பிழிந்து விடுகிறார்கள். இவ்வாறாக, திரைப்படங்கள் தன் பல்வேறு தளங்களில் ஆக்டோபஸ் போல கால்களைச் சுழற்றி நம் ரசனையை அப்படியே இறுக்கிக் கவ்விக் கொண்டிருக்கிறது.


இப்படி நமது ஒவ்வொரு செல்லிலும் சினிமா ரசனை நிரம்பியிருந்தாலும், இன்றைய சினிமாக்கள் என்ன சொல்கின்றன? ஏதாவது மாற்றம் இருக்கிறதா?

 

 

 

மேலும்...

Add comment


பெயர் *
மின்னஞ்சல் *
கருத்து
 

 
Security code
Refresh

 
 
Your Cart
Cart empty
 x