சென்ற வார இதழில்

வாடகைக் கருப்பைகள் வருகிறது புது விதிகள்

-ஜி.எஸ்.எஸ்


வாடகைத்தாய் முறையில் புதிய சட்ட திருத்தங்கள் செய்யவுள்ளது மத்திய அரசு


சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன் வாடகைத்தாய் என்றால் என்ன அர்த்தம் என்று விளங்காதவர்கள் பலர் இருந்தார்கள்.  இன்று அது அனைவருக்கும் புரியும் ஒன்று. 


கணவரின் விந்தணுவும், மனைவியின் முட்டையும் சேரும்போது கரு உண்டாகிறது.   இந்தக் கருமுட்டையை மனைவியின் உடல் தாங்கி பத்து மாதங்கள் சுமந்து அவளது கருப்பையிலிருந்து குழந்தை வெளியேறுவதுதான் இயற்கை.  ஆனால், ஏதோ ஒரு கோளாறினால் அந்த மனைவியால் கருமுட்டையைத் தன்னுள் வளர்க்க முடியவில்லை என்றால் என்ன செய்வது?  அதற்கு உதவத்தான் வாடகைத்தாய் தொழில் நுட்பம் (Surrogacy). 


சோதனைச் சாலையில் கணவரின் விந்தணுவும், மனைவியின் கரு முட்டையும் இணைந்து கரு உருவான சில நாட்களில் அதை வேறொரு பெண்ணின் கருப்பைக்குள் செலுத்துவார்கள்.  அந்தப் பெண் உரிய காலத்தில் பிரசவித்து அந்தக் குழந்தையை தம்பதியிடம் கொடுத்து விடுவாள்.  இதற்காக அந்தப் பெற்றோர் கணிசமான தொகையை அந்தப் பெண்ணுக்குக் கொடுப்பார்கள்.  தன் கருப்பையை வாடகைக்காக  சில காலம் அளிக்கச் சம்மதிப்பதால் அவள் வாடகைத்தாய் எனப்படுகிறாள். 


ஆனால், நடைமுறையில் இது தொடர்பாக பல சிக்கல்கள் எழுந்தன...

 

 

 

மேலும்...

Add comment


பெயர் *
மின்னஞ்சல் *
கருத்து
 

 
Security code
Refresh

 
 
Your Cart
Cart empty
 x