சென்ற வார இதழில்

உன்னை நானறிவேன்

-டாக்டர் டி.வி. அசோகன்


இருண்டு கிடக்கும் இதயங்களில் உற்சாக ஒளியேற்றும் உளவியல் தொடர்


வருடம் முழுவதும், நாளை என்கிற ஒரு நாளே சோம்பேறியை வசீகரப்படுத்துகிறது (ஜிம்மி லியோன்ஸ்)


மின்னணு பரிவர்த்தனை கோட்பாட்டிற்காக, செல்லாது என்று அறிவித்த 500 ரூபாய் மற்றும் 1000ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக  வங்கிகளின் முன்னால், நாம் அலையென திரண்டோம். இதற்கு மாறாக, ஒரு கற்பனைக்கதை ஒன்றை நினைத்துப் பார்ப்போம்.


வங்கியொன்று  ஒரு கிராமத்தில் பின்வருமாறு விளம்பரம் செய்தது. இன்றிலிருந்து ஒரு வாரத்திற்கு, காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணிவரை, ஒவ்வொருவர் கணக்கிலும், 1இலட்சம் ரூபாய் இலவசமாக வரவு வைக்கப்படும். மாலை 6 மணிக்குள், அந்த 1 லட்ச ரூபாயினை ஒருவர் வங்கியிலிருந்து எடுத்துக்கொள்ளலாம். அவ்வாறு எடுக்காமல், எஞ்சியிருக்கும் தொகை வங்கிக் கணக்கில் சேர்ந்துவிடும். ஆனால், மறுநாள் காலை, அவர் எவ்வளவு பணம் எடுத்திருந்தாலும், மறுபடியும் 1 லட்சம் அவர் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று விளம்பரப்படுத்தியிருந்தார்கள்.


இடைப்பட்ட அந்த 12 மணிநேரத்தில் (அல்லது 86400 வினாடிகளில்)அனைவரும் தங்களுடைய அக்கௌண்டில் தினமும் தவறாமல்  ரூபாய் 1 லட்சத்தினை எடுத்திருந்தனர்.


ஆனால், நம்மில் பலர்அந்த 86400 வினாடிகளில் செய்ய வேண்டிய வேலையினை சரிவர செய்கிறார்களா என்கிற கேள்விக்கு நேர்மையான பதில், இல்லை என்பதாகத்தான் இருக்கும். இன்று செய்ய வேண்டிய வேலையினை, நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் என்கிற  தாமதப்படுத்தும் மனப்பான்மை, நம்மில் எல்லோரிடமும் இருக்கிறது.


கல்லூரிப் பேராசிரியரொருவர்  அன்று வகுப்பில், இன்னும் ஒரு வாரத்துக்குள் எல்லோரும் தங்களின் ஆய்வுக்கட்டுரையினை சமர்ப்பித்தாக வேண்டும். இல்லையென்றால் நீங்கள், இறுதித் தேர்வு எழுதுவது சிரமம்" என்று சொன்னபோது...

 

 

 

மேலும்...

Add comment


பெயர் *
மின்னஞ்சல் *
கருத்து
 

 
Security code
Refresh

 
 
Your Cart
Cart empty
 x