சென்ற வார இதழில்

இது ஜவ்வு அல்ல, ஜிவ்வு!

-எல்லுச்சாமி கார்த்திக்


இளைஞர்களை குறிவைக்கும் யூ டியூப் சீரியல்கள்


வீட்டில் வெங்காயம் உரித்துக்கொண்டே மெகாசீரியல் பார்த்து, ‘டபுள் எஃபெக்ட்’டில் தாய்க்குலங்கள் கண்ணீர் சிந்திக்கொண்டிருக்க, இளசுகளின் மத்தியில் சமீப காலங்களில் வைரல் ஹிட் அடித்து வருகிறது வெப் சீரியல்கள். யூட்யூப் வீடியோ மூலமாக எந்தவித விளம்பர பிரேக்கும் இல்லாமல் நீண்ட நாட்களுக்கு ஜவ்வு போல இழுக்காமல் அரைத்த மாவையே அரைக்காமல் ‘ஜிவ்’வென்று 10 முதல் 20 எபிசோடுகளுக்குள் ‘நச்’சென்று கலர்புல்லாக ஒளிபரப்பாகின்றன இந்த வெப் சீரியல்கள்.


கலகலப்பான கதைக் களத்தை மையப்படுத்தி இளைஞர்கள் அனைவரும் தங்களின் அன்றாட வாழ்வில் சந்திப்பதையும், கடந்து வந்த பாதையையும் மையப்படுத்தி இயக்கப்படுவதுதான் வெப் சீரிஸின் கான்செப்ட். ஒரு பிரெண்ட்ஸ் கேங்கில் உள்ள ஒருவரின் வாழ்வில் நடக்கின்றவை போன்றே உண்மையான, மனதுக்கு மிகவும் நெருக்கமான பிம்பத்தை வெப் சீரியல்கள் உருவாக்கும்.


கடந்த சில ஆண்டுகளாகத்தான் இந்தியாவில் வெப் சீரிஸ் பிரபலமாகி வருகிறது. டில்லி, மும்பை போன்ற பகுதிகளில் வசிக்கும் இளைஞர்கள் வெப் சீரிஸுக்கு அடிக்டட் எனச் சொல்லலாம். தமிழில் வெப் சீரிஸ் கான்செப்ட் அறிமுகமானது கடந்த 2014-15 வாக்கில் தான்.


இளசுகளின் சந்தோசம், துக்கம் என அனைத்தையும் கலகலப்பாக திரைக்கதையில் சொல்வது வெப் சீரிஸின் பாணி. முழுவதும் திரைத்துறையில் அஸிஸ்டெண்ட்களாக பணியாற்றிவரும் உதவி கேமிரா மேன், உதவி இயக்குநர், நாடக நடிகர்கள் மற்றும் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் நடிகர்கள் என அனைவரும் வெப் சீரிஸில் பங்குபெற்றுள்ளனர். ஒரு முழு நீள திரைப்படத்தில் உள்ள அனைத்து டெக்கனிக்கல் சமாச்சாரங்களும் வெப் சீரிஸில் இருக்கும். சவுண்ட் டிசைனிங், கேமிரா ஷாட்ஸ், வசனம், இசை என அனைத்துமே இதிலும் இருக்கும். அதுமட்டுமல்லாது, இந்த சீரியல்களை  திரைப்படங்களில் பணியாற்ற விசிட்டிங் கார்டாக பயணப்படுத்திக் கொள்ளலாம்.


அதேபோல, ஒரு படைப்பாளி என பார்க்கும்போது...

 

 

 

மேலும்...

Add comment


பெயர் *
மின்னஞ்சல் *
கருத்து
 

 
Security code
Refresh

 
 
Your Cart
Cart empty
 x