சென்ற வார இதழில்

‘THAI’ மண்ணே, வணக்கம்

-பட்டுக்கோட்டை பிரபாகர்


மலேஷியாவுக்கு, அதாவது அதன் தலைநகரான கோலாலம்பூர் விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்ததும் இமிக்ரேஷன் செக்கிங்கில் கூட்டம் என்றால் நம்ம ஏடிஎம் முன்னால் நிற்பதுபோல (இனி ஏடிஎம்மில் 2000க்கு பதில் 4500 எடுக்கலாம் என்கிற புதிய அறிவிப்பு பற்றி என் நண்பர் சொன்ன ஒரு கடுப்பான கமெண்ட் இடைச் செருகலாக: எவ்வளவு ஏத்துனா என்ன? திறந்திருந்தாதானே? நிரப்பினாத்தானே? கேக்காத காதுக்கு கம்மல் ஒரு கேடு! உக்கும்!)


நாலே கவுண்ட்டர்களை வைத்துக்கொண்டு பயணிகளை மணிக்கணக்கில் க்யூவில் அலுப்பு சலிப்புடன் நிற்க வைத்து வதைக்கும் கொடுமை பற்றி ஏற்கெனவே சொல்லியிருந்தேன். அதே எரிச்சல் அனுபவம் மீண்டும். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேல் நின்றதில் விமானத்தில் சாப்பிட்டதெல்லாம் ஜீரணமாகி அடுத்த  பசியே துவங்கிவிட்டது.


எங்கள் செக் இன் லக்கேஜ்களை சேகரிக்கச் சென்றோம். சுழலும் பெல்ட்டில் பரிதாபமான முகங்களுடன் லக்கேஜ்கள் சுற்றிக் கொண்டிருக்க, வழக்கம்போல ஒரு லக்கேஜ் மட்டும் வரவில்லை. இந்த முறை சம்மந்தியுடையது.


போச்சுடா! மீண்டும் புகார், அலைச்சல், காத்திருப்பு, மன   உளைச்சல் என்று அவஸ்தைப்படப் போகிறோமா என்று பதைப்புடன் கிட்டத்தட்ட சாயலில் இருந்த அடுத்தவரின் லக்கேஜை  எல்லாம் எடுக்கப்போய்... முறைப்பு வாங்கி அசடு வழிந்து... பள்ளிக்கூடம் விட்டு எல்லா மாணவர்களும் போனதும் கடைசி  மாணவனாக ஒருவன் குச்சி மிட்டாய் சப்பியபடி வருவான் பாருங்கள்.. அந்த மாதிரி கடைசி லக்கேஜாய் வந்து சேர்ந்தது அந்த சூட்கேஸ்.


ஏற்கெனவே அது சற்று காயப்பட்டிருந்ததால் அதற்கு டேப், பிளாஸ்த்ரி என்று முதலுதவிகள் செய்யப்பட்டிருந்தது. இந்தப் பயணத்தின் களைப்பில் அதெல்லாம் கலைந்து அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கும் மோசமான கோலத்தில் இருந்தது.


எங்களை பிக்கப் செய்ய வந்த ஏஜெண்ட்டிடம் வழக்கம்போல ‘ஸாரி’ சொன்னோம். ஆனால், அந்தப் பெண்மணி ‘இதெல்லாம் சகஜமப்பா’ என்று ஒரு புன்னகையால் எங்கள் ஸாரியை ஒதுக்கி விட்டு வரவேற்று வாகனத்தில் அமர வைத்தாள்.


அவளை வர்ணிக்கலாமென்றால்...

 

 

 

மேலும்...

Add comment


பெயர் *
மின்னஞ்சல் *
கருத்து
 

 
Security code
Refresh

 
 
Your Cart
Cart empty
 x