சென்ற வார இதழில்

தவில் இசைக்கும் தளிர்விரல்கள்

-சு.வீரமணி


ஒரு கோவில் நிகழ்ச்சியில் பார்த்தோம். அற்புதமாக தவில் வாசித்துக்கொண்டிருந்தார் அந்தச் சிறுமி. அவரைப் பற்றி விசாரித்தபோது, அவர் மன்னார்குடியைச் சேர்ந்த அமிர்தவர்சினி என்பது தெரிந்தது.


பாரம்பரியமான இசைக்குடும்பத்தைச் சேர்ந்த இவரது தந்தை மணிசங்கர், நாதஸ்வர கலைஞர். தாய் ஜெயந்தி சங்கர், வயலின் கலைஞர், இவர் திருச்சி அரசு இசைப்பள்ளியில் வயலின் ஆசிரியராக உள்ளார்.


அமிர்தவர்சினியிடம் பேசினோம்.


எங்கள் வீட்டில் எல்லோருமே தவில், நாதஸ்வரம், வயலின் போன்ற இசைவாத்தியங்கள் வாசிப்பார்கள்.அதனை நான் அருகில் இருந்து பார்த்தும், கேட்டும்தான் வளர்ந்தேன். என் அண்ணன்கள் ரெண்டு பேருமே நாதஸ்வரம் வாசிப்பார்கள். அதுபோல, எனது அக்கா ஒருவரும் நாதஸ்வரம் வாசிப்பார். அதனால், எனக்கும் ஏதாவது ஒரு வாத்தியம் வாசிக்கவேண்டும் என்ற ஆசை வந்தது.


அப்போதுதான் பெண்கள் யாரும் வாசிக்காத தவில் வாசிக்கலாம் என முடிவு செய்தேன். தவில் பொதுவாக ஆண்கள்தான் வாசிப்பார்கள் என்பதால் நான் வாசிப்பதாக சொன்னதும் வீட்டில் முதலில் தயங்கினார்கள் பின்னர் நான் விடாப்பிடியாக இருந்து கற்றுக்கொண்டேன். நான் கற்றுக்கொள்ள ஆரம்பித்தபோது, எனக்கு வயது எட்டு...

 

 

 

மேலும்...

Add comment


பெயர் *
மின்னஞ்சல் *
கருத்து
 

 
Security code
Refresh

 
 
Your Cart
Cart empty
 x