சென்ற வார இதழில்

தகவல் அறியும் விண்ணப்பம் தமிழில் இருக்கக் கூடாதா?

-இவள் பாரதி


நவம்பர் எட்டாம் தேதி இரவு பிரதம மந்திரி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்போது, 09.11.2016 முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் மக்கள் பயன்பாட்டில் இருந்து தடைசெய்யப்படுகிறது என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதுகுறித்து, 09.11.2016 அன்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சில தகவல்களைக் கேட்டிருந்தேன். மக்கள் பயன்பாட்டில் உள்ள ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கி கவர்னர் கையெழுத்திடப்பட்டது. அதை பிரதமரான நீங்கள் செல்லாது என்பதை எந்தச் சட்டத்தின் கீழ் அறிவித்தீர்கள்? என்ன நோக்கத்துக்காக அறிவிக்கிறீர்கள்? இப்படி அறிவிக்க யாருக்கெல்லாம் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது" உள்ளிட்ட தகவல்களைக் கேட்டு, மத்திய பொது தகவல் அலுவலர், இந்திய பிரதமர் அலுவலகம், புதுடெல்லி அலுவலகத்துக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விண்ணப்பித்திருந்தேன். இதற்கான விண்ணப்பத்தைத் தமிழில் எழுதி அனுப்பியிருந்தேன்.


அதேபோல, 11.11.2016 அன்று வேறு சில தகவல்களைக் கேட்டு ரிசர்வ் வங்கி, மும்பைக்கு ஒரு ஆர்.டி.ஐ. விண்ணப்பம் அனுப்பியிருந்தேன். அதில் எங்கெல்லாம் ரூபாய் தாள்கள் அச்சிடப்படுகின்றன? எவ்வளவு ரூபாய் தாள்கள் அச்சிடப்படுகின்றன? அதற்காகும் செலவு எவ்வளவு" உள்ளிட்ட விவரங்களைக் கேட்டிருந்தேன். இந்தக் கடிதத்தையும் தமிழில்தான் எழுதியிருந்தேன். என்னுடைய கேள்வியையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதற்கான தகவல்களையும் ரிசர்வ் வங்கி ஆங்கிலத்தில் அனுப்பியிருந்தது. பாதுகாப்பு கருதி சில தகவல்களைச் சொல்ல முடியாது; 19 இடங்களில் ரூபாய் தாள்களை அச்சிட்டு வருகிறோம்"  என்றும், நீங்கள் கேட்ட தகவல்கள் எங்களிடம் இல்லை. அதனால் உங்கள் கடிதத்தை பெங்களூருக்கும், டெல்லிக்கும் அனுப்பியிருக்கிறோம்" என்றும் அதில் குறிப்பிட்டு, சம்பிரதாயத்துக்கு ஒரு பதிலையாவது அனுப்பியிருந்தனர்.


ஆனால், பிரதமர் அலுவலகத்தில் இருந்து நவம்பர் ஒன்பதாம் தேதி அனுப்பிய கடிதத்திற்கு, டிசம்பர் பத்தாம் தேதி மத்திய அரசு தொடர்புடைய ஆர்.டி.ஐ. விண்ணப்பம் ஆங்கிலத்திலோ, ஹிந்தியிலோ இருக்கவேண்டும். தகவல்களைத் தமிழில் கேட்டிருக்கிறீர்கள். அதனால், இந்தக் கடிதத்தை நிராகரிக்கிறோம் என்று பதில் அனுப்பியுள்ளனர். நாங்கள் கேட்ட எந்தத் தகவல்களையும் தராமல் இப்படியான ஒரு பதிலை, அதுவும் ஒரு மாதம் கடந்து அனுப்பியிருக்கின்றனர். உடனே 20.12.2016ல் மேல்முறையீடு செய்கிறோம். ஒரு மாதம் வரைக்கும் பதில் அனுப்பலாம்...

 

 

 

மேலும்...

Add comment


பெயர் *
மின்னஞ்சல் *
கருத்து
 

 
Security code
Refresh

 
 
Your Cart
Cart empty
 x