சென்ற வார இதழில்

வறண்ட வயல்களில் மடியும் விவசாயிகள்

-சு. வீரமணி


காவிரி டெல்டா மாவட்டங்களில் கிராமத்திற்கு கிராமம் மரண ஓலமும், ஒப்பாரியும் நெஞ்சை பதற வைக்கிறது. தமிழகம் எங்கும் பேரிடர் சூழ்ந்து நிற்கிறது. ஈரோடு, தூத்துக்குடி,சிவகங்கை, கடலூர், அரியலூர் என்று எல்லா மாவட்டங்களிலும் விவசாயிகளின் மரணங்கள் தொடர்கதையாகியிருக்கிறது. நாகையில் இதுவரை 30 விவசாயிகளும், திருவாரூரில் 15 விவசாயிகளும் கருகியப் பயிர்களை கண்ட அதிர்ச்சியில் மடிந்திருக்கிறார்கள். மொத்தமாக தமிழகம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் மரணமடைந்திருக்கிறார்கள்.


படையல் போட்டு பொங்கலிடும் இயற்கையும், வரிகட்டி, வாக்கு செலுத்தி வளர்த்துவிட்ட அரசாங்கமும் ஒருசேர கைவிரித்த நிலையில் வாழ வழியின்றி தாயாய், பிள்ளையாய் வளர்த்த வயலில் விழுந்தே வாழ்க்கையை முடித்துகொள்கிறார்கள் விவசாயிகள்.


இறந்திருக்கும் 60 விவசாயிகளில் ஐம்பது பேருக்கும் மேற்பட்டவர்கள் காவிரியை நம்பி விவசாயம் செய்தவர்கள்.


கர்நாடகம் முக்கி முனகி தந்த மிச்ச சொச்ச தண்ணீரை மேட்டுரில் சேர்த்த தமிழக அரசு, விவசாயிகள் எப்படி விவசாயம் செய்யவேண்டும், என்ன பயிர் செய்யவேண்டும், எவ்வளவு நிலத்தில் விவசாயம் செய்யவேண்டும் என்று ஒரு தெளிவான வழிகாட்டுதலை விவசாயிகளுக்கு வழங்கியிருக்கவேண்டும். அதற்காகத்தான் வேளாண்துறையும் அதற்கான அமைச்சரும், அதன்கீழ் இயங்கும் பல்கலைக்கழகங்களும், விஞ்ஞானிகளும், நிபுணர்களும் இருக்கிறார்கள் அதனை அவர்கள் முறையாக செய்யவில்லை.


ஆற்றில் தண்ணீர் வந்ததை பார்த்த விவசாயிகள் எப்படியும் கழனி உழுது கரையேறிவிடலாம் என்று விதைவிதைத்தார்கள். ஆற்றில் வந்த தண்ணீர் வாய்க்காலுக்கு கூட முழுதாய் வராமல் போகவே நாற்றங்காலிலேயே...

 

 

 

மேலும்...

Add comment


பெயர் *
மின்னஞ்சல் *
கருத்து
 

 
Security code
Refresh

 
 
Your Cart
Cart empty
 x