சென்ற வார இதழில்

தலையங்கம்

அன்னை மடியில் மடிவதா?


புத்தாண்டு கொண்டாடுவதற்கான உற்சாகத்தில் தமிழகம் இருந்தபோதுதான் அந்த நெஞ்சைச் சுடும் வேதனைச் செய்தி. பயிர் கருகிய துக்கம் தாளாமல் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 12 தமிழக விவசாயிகள் ஒரேநாளில் அதிர்ச்சியில் இறந்துள்ளனர். 


அந்தச் செய்தியின் சோகமும் அதிர்ச்சியும் மாறுவதற்குள் மீண்டும் அதிர்ச்சி. வேளாண்மை பொய்த்ததால் மேலும் 8 விவசாயிகள் மரணம். காவிரியும் வான்மழையும் கைவிரித்த காரணத்தால், தண்ணீரின்றிக் காய்ந்து கிடக்கும் டெல்டா பாசன வாய்க்கால்கள் மண்ணின் மைந்தர்களின் கண்ணீரால் நிரம்பிக் கொண்டிருக்கிறது.


இதுவரை தமிழகமெங்கும் அறுபதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் அதிர்ச்சியாலும் தற்கொலையாலும் இறந்திருப்பதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கும் மிஞ்சாது" என்பார்கள். இன்று அது உயிரும் மிஞ்சாது என்று மாறிப் போயிருக்கிறது.


உயிர் துறந்த விவசாயிகளுக்கு என்னென்ன கனவுகள் இருந்தனவோ? தன் மகளது திருமணத்தை நடத்திப் பார்க்கத் துடித்திருக்கலாம் ஒருவர். தன் மகனின் கல்லூரிக் கட்டணத்தைக் கட்ட வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருந்திருக்கலாம் இன்னொருவருக்கு. இறுக்கிப் பிடிக்கும் கடனை அடைத்துவிட்டு நிம்மதியான வாழ்க்கை வாழத் துடித்திருக்கலாம் இன்னொரு அப்பாவி...

 

 

 

மேலும்...

Add comment


பெயர் *
மின்னஞ்சல் *
கருத்து
 

 
Security code
Refresh

 
 
Your Cart
Cart empty
 x